அமைச்சர் பதவியிலிருந்து நாசர் நீக்கப்பட்டுள்ளதையடுத்து விரைவில் நல்ல முடிவெடுக்க இருக்கும் அண்ணன் நாசர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என அதிமுகவைச் சேர்ந்த CTR நிர்மல் குமார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து மூன்றாவது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அமைச்சரவையிலிருந்து அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். நாற்காலி எங்கே எனக் கேட்டு தனது சொந்த கட்சியினர் மீது கல்லை வீசி தாக்கப்பட்டது. ஆவின் நிர்வாக சர்ச்சை, அதிகாரிகளுடன் இணக்கமற்ற சூழல் என, அடுத்தடுத்து சர்ச்சைகளில் அமைச்சர் நாசர் சிக்கினார்.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
பாஜகவிலிருந்த நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி அண்மையில் அதிமுகவில் இணைந்தார்.இந்த நிலையில், நாசருக்கு ஆதரவாக அதிமுகவின் ஆதரவாளர் CTR நிர்மல குமார் டிவிட் செய்துள்ளார்.
அதில் அண்ணன் ஆவடி நாசர் செய்த களப்பணியில் உதயநிதி 1% செய்திருப்பாரா ? என முதலமைச்சருக்கு டேக் செய்துள்ளார்.
மேலும் உழைப்பவர்கள் எங்கு சென்றாலும் சிறப்பு விரைவில் நல்ல முடிவெடுக்க இருக்கும் அண்ணன் நாசர் அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து நீக்கம் செய்யபட்ட நாசர் அதிமுகவில் இணைய போவதாக தற்பொழுது சமூக வலைதளங்களில் பேச்சு பொருளாக மாறியுள்ளது.