கன்னடத்திரை உலகில் ரஷ்மிகா அறிமுகமான தொடர்ந்து தமிழ் தெலுங்கு,ஹிந்தி மலையாளம் என அணைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.மேலும் தமிழில் விஜய் 66 படத்தில் தற்பொழுது நடித்து முடித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் மட்டும் இன்றி தென்னிந்திய திரை உலகில் கனவு கன்னியாக வலம் வரும்இவர், குறுகிய காலத்திலேயே ரஷ்மிகா மந்தனா வளர்ச்சி அடைந்த நிலையில் திரையுலகில் இவர் பிரபலம் அடைவதற்கு முன்னரே, காதலில் விழுந்து, காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
ஆனால், சில காரணங்களுக்காக அதை முறித்துக் கொண்டார். அதன் பிறகு தான் நடிகையாக மிகப்பெரிய அளவுக்கு பேசப்பட்டார். தெலுங்கு திரை உலகில் முதல் படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம் மிக பெரிய வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் இவர்களுது ஜோடி செம ஹிட் அடித்தது.
இதனை தொடர்ந்து பல படங்களில் சேர்ந்து நடித்தனர்.இந்த நிலையில் தற்போது, நடிகர் விஜய தேவரகொண்டாவுடன் காதல் வயப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா மாலத்தீவில் கையில் சரக்கு பாட்டிலுடன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதில், ஒரு வருடம், நாம் அனைவரும் கடினமாக சிரித்தோம், அமைதியாக அழுதோம், இலக்குகளைத் துரத்தினோம், சிலவற்றை வென்றோம், சிலவற்றை இழந்தோம்.
நாம் எல்லாவற்றையும் கொண்டாட வேண்டும்.அதுதான் வாழ்க்கை என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோவையும், ராஷ்மிகா மந்தனா ரிசார்ட்டின் குளத்தில் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்து இருவரும் ஒரே இடத்தில் இருப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளனர்.
இதே போல கடந்த அக்டோபர் மாதமும் இவர்கள் இருவரும் மாலத்தீவு செல்ல தனித்தனி காரில் விமான நிலையம் வந்தாலும், ஒரே விமானத்தில் தான் மாலத்தீவு சென்றனர். அது மட்டுமில்லாமல், விஜய் தேவரகொண்டாவின் கூலர் கண்ணாடியை, ராஷ்மிக போட்டுக்கொண்டு போட்டோ எடுத்து குறிப்பிடத்தக்கது.