தீபாவளி விழாவை முன்னிட்டு, ராஜபாளையம் எம்எல்ஏ எஸ்.தங்கபாண்டியன், தனது தொகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு ஜவுளிக்கடைக்கு அழைத்துச் புதிய ஆடைகள் வாங்கிக் கொடுத்த சம்பத்த்வம் நெகிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.தங்கபாண்டியன். தற்பொழுது 2வது முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் கடந்த 6 ஆண்டுகளாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவாளி புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜபாளையம் அருகே பொன்னகரம், மருதுநகர் காப்பகம், சேத்தூர ஆதரவற்ற 3 காப்பகங்களில் உள்ள ஆதரவற்ற 211 குழந்தைகளுக்கு ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏ தங்கபாண்டியன் தீபாவளி பரிசு வழங்கி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இது குறித்து ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.தங்கபாண்டியன் தெரிவிக்கையில்,
“கடந்த ஐந்து வருடங்களாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி வருகிறேன். அதேபோல், 6வது ஆண்டாக தீபாவளியன்று குழந்தைகளுக்கு புத்தாடை வழங்க முடிவு செய்யப்பட்டது.
பொதுவாக, குழந்தைகளுக்கு சரியான அளவு இருப்பதையும், புதிய ஆடைகளை கொடுக்கும்போது அவர்கள் ஆடைகளை விரும்புவதையும் உறுதிப்படுத்த முடியாது. ஷாப்பிங் போகும்போது, பண்டிகைக் காலங்களில் நமக்குப் பிடித்தமான உடைகளைத் தேர்வு செய்வது போல அவர்களும் அவர்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
இதற்காக ராஜபாளையத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு காப்பாளர்கள் மேற்பார்வையில் மூன்று ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து குழந்தைகள் அழைத்து வரப்பட்டனர்.
ஜவுளிக்கடையில் குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த ஆடைகளை மகிழ்ச்சியுடன் தேர்வு செய்தனர். இதற்கான செலவு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் தனது சட்டமன்ற உறுப்பினர் மாத ஊதியத்தில் இருந்து இதற்கு செலவு செய்திருக்கிறார்.
கல்வி மட்டுமே குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. எனவே அனைவரும் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும் என்று அந்தக் குழந்தைகளிடம் கூறினேன். தமிழக அரசு அனைத்து இடங்களிலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. அவர்களின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகிறது. எனவே, அவர்கள் ஆதரவற்ற குழந்தைகள் அல்ல, அனைவரின் ஆதரவையும் பெற்ற குழந்தைகள்,” என்றார்.