நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 18 வது நாடாளுன்ற தேர்தல் ஏப்ரல் 19 தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடித்து. மேலும் ஜூன் 4ஆம் தேதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வெளியானது.
அதில், பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி – 292 தொகுதிகளையும், காங்கிரஸ் இண்டியா கூட்டணி -232 தொகுதிகளையும், மற்றவை – 19 தொகுதிகளையும் கைப்பற்றியது.
இதில் தனித்து ஆட்சி அமைக்க தேவையான 272 தனிப்பெருமான்மை கிடைக்கவில்லை. ஆனால் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது.பாஜக கூட்டணி கட்சிகள் 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இதையும் படிங்க: ”பரபரப்பை எகிற வைத்த NDA கூட்டணி ஆலோசனைக் கூட்டம் ..” பிரதமர் மோடி உருக்கம்!
இதனால் கூட்டணி கட்சிகளான ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபா நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா உள்பட கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் எம்பிக்களின் உதவியுடன் பிரதமர் மோடி, 3வது முறையாக நாளை (ஜூன் 9) பதவியேற்க இருக்கிறார்.இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதையடுத்து, இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக உலகத் தலைவர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான மாலத்தீவுக்கான இந்திய தூதர் முனு மவாகர், அழைப்பிதழை முகமது முய்சுவிடம் வழங்கினார். இந்த அழைப்பை முய்சு ஏற்றுக்கொண்டதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுவதாகவும், இது இந்தியா-மாலத்தீவு இடையிலான இருதரப்பு உறவுகள் நேர்மறையான திசையில் சென்று கொண்டிருப்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்கும் என்றும் முகமது முய்சு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.