கொல்லிமலையில் அமைய உள்ள இரவு வான் பூங்காவுக்கு தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக ரூ 44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வனத்துறை சார்பில் ‘இரவு வான் பூங்கா’ அமைக்க முதற்கட்டமாக ரூ 44 லட்சம் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Also Read : கேரளாவை உலுக்கிய இரட்டைக்கொலை – தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல் துறை..!!
சுமார் 1 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள இந்த பூங்கா, உலகம் முழுவதும் உள்ள வானியல் புகைப்படக் கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் 71 கொண்டைஊசி வளைவுகளை கொண்ட இந்த அழகிய கொல்லிமலைக்கு தினமதூரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருக்கும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அங்கு சில திட்டங்களை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு ஆயுத்தமாகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.