Nirmala Sitharaman | டெல்லியில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஏழு உள்கட்டமைப்புத் திட்டங்களை காணொளி காட்சிகள் மூலம் தொடங்கி வைத்தார்.
இந்தத் நிகழ்ச்சியில் விழாவில் நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா, நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி, மத்திய நேரடி
வரிகள் வாரியத் தலைவர் நிதின் குப்தா, மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத் தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:ஸ்டெர்லைட் தீர்ப்பு : முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த பூவுலகின் நண்பர்கள்!!
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
திட்டங்கள் தாமதமின்றி முடிக்கப்படுவதை உறுதி செய்வது முக்கியம் என்றும், கட்டுமானப் பணிகள் உரிய காலத்தில் தொடங்கப்படுவதையும், கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் திட்டங்கள் முடிக்கப்படுவதையும் சம்பந்தப்பட்ட துறை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற திட்டங்கள் அதிகாரிகளின் நம்பிக்கையையும், மனஉறுதியையும் அதிகரிப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு விழா மேடையில் பிரதமர் மோடிக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கொடுத்த உத்தரவாதம்!
மேலும் உலகளாவிய அரங்குகள், அது ஜி20 அல்லது ஐ.நா.வில் நமது ஈடுபாடு போன்றவையாக இருந்தாலும், அனைவருக்கும் சிறந்த 21ஆம் நூற்றாண்டைக் கட்டியெழுப்ப உதவும் நிறுவனங்களைச் சீர்திருத்துவதில் இந்தியாவின் தீர்வுகளில் இப்போது கவனம் செலுத்துகிறது.
வளர்ந்து வரும் உலகளாவிய நிலப்பரப்பில் இந்தியாவின் முக்கிய பங்கை இது பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.