கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து பிஆர் மாநிலம் பரௌனி வரைக்கும் ராப்பித்திசாகர் விரைவு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்திற்கு வந்த பொழுது பதிவு செய்யப்பட்டிருந்த பெட்டிகள் முன்பதிவு இல்லாமலேயே சாதாரண பயண சீட்டை கொண்டு வட மாநில தொழிலாளர்கள் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கும் வட மாநிலத்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டத்தை தொடர்ந்து ரயிலில் உள்ள அபாய சங்கிலியை முன்பதிவு செய்த பயணிகள் இழுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ரயில் நிறுத்தப்பட்டு உடனடியாக ரயில்வே பாதுகாப்பு, அதிகாரிகள், இரயில்வே காவல் துறையினர், பயண சீட்டு பரிசோதகர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.
மேலும் அந்த பெட்டியில் பயணம் செய்த வட மாநில தொழிலாளர்களை அப்புறப்படுத்தினர்.இதனை தொடர்ந்து ஈரோடு ஜோலார்பேட்டை செல்லும் ரயிலில் சுமார் 150 மேற்பட்ட வடமாநில பயணிகள் ஏற்றிவிடபட்டனர்.
இதனை தொடர்ந்து அதே ரயில் நிலையத்தில் மீண்டும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் முன்பதிவு செய்து இருந்த பயணிகள் தங்களுக்கு பயணமே வேண்டாம் என்று ரத்து செய்து வீடு திரும்பிய அவலமும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடகள் கழித்து புறபட்டது.
ஹோலி பண்டிகை கொண்டபட உள்ள நிலையில் ஈரோடு ,திருப்பூர் ,கோவை,சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் நிலையில்,இந்த மாதிரியான சம்பவங்கள் முன்பதிவு செய்யபட்ட பயணிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.