பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாளை பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை (17.09.23) முன்னிட்டு நாளை முதல் ஒரு வாரத்திற்கு, மக்களுக்கு பல்வேறு நல திட்ட உதவி, சேவை பணிகளை செய்யுமாறு கட்சியினருக்கு, தமிழக பா.ஜ.. உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மண்டல் அளவிலும் ரத்ததான முகாம், மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், துாய்மை பணிகளை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இலவச காப்பீடு உள்ளிட்ட திட்டங்களில் புதிய பயனாளிகளை சேர்ப்பதுடன், கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்ற விபரங்களை துண்டறிக்கையாக வீடுகள் தோறும் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை தனது 73வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிறந்தநாள் வாழ்த்தில் பிரதமர் மோடிக்கு, ஓ.பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில்,
“எளிய பின்னணியில் இருந்து தலைமைத்துவத்தின் உயர்ந்த நிலைக்கான உங்களின் பயணம் எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.