ஓமைக்ரான் உருமாறிய கொரோனா குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதன் அறிகுறிகள் குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக உருமாறிய புதிய வகை கொரோனாவான ஓமைக்ரான் தென் ஆப்ரிக்கா, பிரேசில், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது.
இந்நிலையில் உருமாறிய கொரோனாவின் அறிகுறிகள் குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முந்தைய உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமைக்ரான் கொரோனா வித்தியாசமானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மிகவும் சோர்வாக உணர்கின்றனர் என்றும் ஆனால் உடலின் ஆக்சிஜன் அளவு பெரியளவில் குறையவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சுவை மற்றும் வாசனை இழப்பு ஏற்படவில்லை அதேநேரம் தொண்டையில் அரிப்பு போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஓமைக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எவ்வித மருத்துவமனை சிகிச்சையும் இல்லாமல் குணமடைந்து வருவதாகத் தென் ஆப்பிரிக்கா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இந்த உருமாறிய கொரோனாவை கண்டறிந்து சில நாட்கள் மட்டுமே ஆவதால் இது குறித்து ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் வரும் காலங்களில் ஓமிக்ரான் கொரோனா குறித்துப் பல புதிய தகவல்கள் தெரிய வரும் என்றும் ஆ்யவாளர்கள் தெரிவித்தனர்.