அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையை கண்டித்து மதுரையில் இருந்து சென்னைக்கு பா.ஜ.க. மகளிரணி நீதிப் பேரணி மேற்கொள்ள உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, தமிழக பாஜக மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் திருமதி உமாரதி அவர்கள் தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது.
வரும் ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக ஆளுநர் அவர்களைச் சந்தித்து, தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.