இந்தியாவில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இணையம் வழியாக ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் வீட்டுக்கே சென்று மது விநியோகிக்கும் வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆன ”Boozie ”நிறுவனம் இந்த சேவையைத் தொடங்கியுள்ளது.
சேவையில் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள மதுக் கடையிலேயே மதுவைப் பெற்று 10 நிமிடத்தில் ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் வாடிக்கையாளரிடம் சேர்க்கும் வகையில் இந்த நிறுவனம் செயலியை உருவாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்குவங்க கலால் துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த சேவை கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .