குழந்தைகள் பெரும்பாலும் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் (panju mittai) புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் வேதியியல் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அற்படுத்தி உள்ளது.
வட மாநில தொழிலாளர்கள் சிலர், புதுச்சேரி கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் பஞ்சு மிட்டாய் தயார் செய்து விற்பனை செய்து வருகிறனர்.
கடற்கரையில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள், (panju mittai) அடர் நிறத்தில் இருந்ததால் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பஞ்சுமிட்டாயை கைப்பற்றி ஆய்வகத்தில் பரிசோதனை செய்தனர். அந்த பஞ்சுமிட்டாயில் தடை செய்யப்பட்ட’ரோடமின் பி’ என்ற விஷ நிறமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிறமி ஊதுவத்தி குச்சியின் கடைசி பகுதியில் நிறமூட்ட பயன்படுத்தப்படுவது என்றும் இவை தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் விஷத்தன்மை கொண்ட நிறமி, என்றும் கண்டறிந்தனர்.
தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் இந்த நிறமிகள் குறைந்த விலைக்கு கிடைப்பதால் வடமாநில தொழிலாளர்கள் வாங்கி, பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இந்த ரசாயனம் கலந்த பஞ்சுமிட்டாய் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும், இதனை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது.
மேலும் பிடிப்பட்ட உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சதிஷ்பாபு முகரியா 21 என்பவரிடம் இருந்து பஞ்சுமிட்டாய்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள் , கோரிமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் சதிஷ்பாபு முகரியா போன்று 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பது தெரியவந்தது.
பஞ்சுமிட்டாய் விற்ற சதிஷ்பாபு முகரியா மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க : 2000 ரூபாய் நோட்டை மாற்ற கமிஷன் 500! – போஸ்டரால் புஸ்வானமான பிசினஸ்
இதன் எதிரொலியாக தமிழகம் முழுவது விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய் கடைகளில் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.
இதனை அடுத்து சென்னை மெரினா கடற்கரை பகுதியில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை கைப்பற்றி உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று ஆய்வு செய்தனர்.
உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் உயிரைக்குடிக்கும் ரசாயனம் கலந்துள்ளது பெறோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.