கோலாகலமாக நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடப்பாண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது . இதில் இன்று நடைபெற்ற ஆடுவருக்கான ஈட்டி எறிதல் இறுதி போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் வீசி வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
2020 ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றதை தொடர்ந்து பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 2வது பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார் . பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இது 5வது பதக்கமாகும்.
Also Read : இந்தியாவுக்கு மேலும் ஒரு சோகம் : 1 கிலோ எடையில் பதக்க வாய்ப்பை இழந்த மீராபாய் சானு..!!
இதேபோல் பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீ எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்து, தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றுள்ளார்.
இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற மாபெரும் பெருமையை பெற்றுள்ளார் அர்ஷத் நதீம். மேலும் 1984ம் ஆண்டிற்கு பிறகு தங்கப் பதக்கம் வென்றுள்ளது பாகிஸ்தான்.