Parliamentary Election Alliance –2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும், கூட்டணி குறித்து தீர்மானிக்கும் அதிகாரத்தை அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து வெளியிடபட்டுள்ள அறிக்கையில்..
திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற வெல்லும் சனநாயகம் மாநாட்டில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்று தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே இது போன்ற மாநாடு நடத்தப்பட்டது இல்லை என்ற சாதனையைப் படைத்துள்ளனர்.
2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்றும்,
கூட்டணியைத்தீர்மானிப்பதற்கான அதிகாரத்தைக் கட்சியின் நிறுவனர்-தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்களிடம் அளிப்பது என்றும் கூட்டம் தீர்மானிக்கிறது.
ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி முடக்கி வருகிறது.
ஜார்கண்ட் மாநில முதலமைச்சர், பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஹேமந்த் சோரன் அவர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைந்து அவரைக் கைது செய்திருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இதையும் படிங்க:Tnmaws Recruitment – மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள்..!
அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பான சந்தேகங்கள் மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில் ,
அந்த வாக்குப்பதிவு எந்திரங்களைத் தயாரிக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்களாக பாரதிய நியமிக்கப்பட்டிருப்பது பொதுத் தேர்தலை
சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களே இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.வாக்குப்பதிவு எந்திரங்களையும் இணைக்க வேண்டும்.
ஒப்புகைச் சீட்டுகளை முழுவதுமாக எண்ணி அதன் அடிப்படையில் தான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
திருமாவளவன் கோரிக்கை:
தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிதிநிலை அறிக்கை எஸ்சி எஸ்டி துணைத் திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட வேண்டும்.
அதற்கு ஏற்ப சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1753327794833252652?s=20
இந்துக் கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக கோயில்களில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்து இருக்கிறது.
சட்டப்பிரிவு 24(4) இந்து அல்லாதவர்கள் செல்வதற்குக் கட்டுப்பாடு விதிக்கின்ற காரணத்தினால் இந்து அல்லாத காவல்துறை அதிகாரிகளும் கோயிலுக்குள் நுழைய முடியாது என்று ஆகிறது.
இது காவல்துறையினரை மத ரீதியில் பாகுபடுத்துவதாக உள்ளது. எனவே, இந்து அறநிலையத்துறை சட்டத்தின் பிரிவு 24 (4) இல் உரிய திருத்தம் செய்வதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.