jallikattu :ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பீட்டா மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அறுவடை காலத்தை கொண்டாடும் ஒரு திருவிழா ஆகும். ஆண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.
அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 18 ஆம் தேதி முடிவடைகிறது.
மேலும் ,தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும். இதில், மதுரை மாவட்டம் அவனியாபுரம்,
பாலமேடு, அலங்காநல்லூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக புகழ்பெற்றவை.
Also Read :https://itamiltv.com/sivakarthikeyan-s-ayalaan-telugu-release-postponed-dil-raju-announces/
அந்த வகையில், உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது.ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த முகூர்த்தக்கால் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, கிராம பொதுமக்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில்,ஜல்லிக்கட்டு போட்டியை காண, அலங்காநல்லூர் கீழக்கரையில் 66 ஏக்கரில் ரூ.44 கோடி செலவில் பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.
அவை 23 அல்லது 24-ஆம் தேதி திறக்கபட உள்ளதாகவும், அதனை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
இந்த சூழலில், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு வழங்கிய அனுமதியை எதிர்த்து, பீட்டா அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில்,பீட்டா மேல்முறையீட்டில், ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.
Also Read :https://x.com/ITamilTVNews/status/1744718777085046920?s=20
அதோடு, இவ்வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது பீட்டா.
இதனைத்தொடர்ந்து,
ஜல்லிக்கட்டிற்கு எதிரான மனுக்களை பரிசீலித்து, பட்டியலிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகள் இயற்கையான செயல் பண்புகளுக்கும், காளைகளின் குணங்களுக்கும் எதிரானது என பீட்டா அமைப்பு அந்த மனுவில் கூறியுள்ளது.
மேலும், 2017 முதல் 2022 வரை நடந்த ஜல்லிக்கட்டு(jallikattu) போட்டிகளை நேரில் பார்த்து சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் தவறிவிட்டது எனவும் பீட்டா தெரிவித்துள்ளது.