3 வேளாண் சட்டங்கள் ரத்து :- `அந்த மர்மம் என்ன?” – சரமாரி கேள்வியெழுப்பிய பீட்டர் அல்போன்ஸ்

ஓராண்டுக்கு மேலாக வெயிலிலும்,மழையிலும் போராடிய விவசாயிகளிடம் யார் மன்னிப்பு கேட்பது என சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

மத்திய அரசு கடந்த ஓராண்டுக்கு முன்பு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஓராண்டாக தொடர் போராட்டம் வெடித்தது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களின் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

அதுமட்டுமின்றி இந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி `டெல்லி சலோ’ என்ற மாபெரும் விவசாயிகள் பேரணியும் நடைபெற்றது. இந்த நிலையில், பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்று அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து, சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது;

கடந்த ஓராண்டுக்கு மேலாக வெயிலிலும்,மழையிலும்,பனியிலும், வருந்தி போராடிய விவசாயிகளிடம் யார் மன்னிப்பு கேட்பது?

உயிர்நீத்த விவசாய போராளிகளின் குடும்பத்தினருக்கு யார் நஷ்ட ஈடு தருவது? எதிர்கட்சிகள் ரத்து செய்ய கேட்டபோது பிடிவாதமாக மறுத்தவர்களின் தலைகீழ் மாற்றத்தின் மர்மம் என்ன? என தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts