“விவசாயிகள் போராட்டத்தை கைவிட முடியாது” – விவசாய சங்க தலைவர் போட்ட கண்டிசன்..!

Spread the love

மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்த நிலையில், விவசாயிகள் சார்பில் ஒருசில நிபந்தனைகளை வைத்ததோடு, விவசாயிகளின் போராட்டத்தை கைவிட முடியாது என விவசாயிகளின் சங்க தலைவர் ராகேஷ் தியாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த ஓராண்டுக்கு முன்பு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஓராண்டாக தொடர் போராட்டம் வெடித்தது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களின் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

அதுமட்டுமின்றி இந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி `டெல்லி சலோ’ என்ற மாபெரும் விவசாயிகள் பேரணியும் நடைபெற்றது. இந்த நிலையில், பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்று அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் உடனடியாக திரும்பபெறப்படாது என விவசாயிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை காத்திருப்போம் என விவசாயிகளின் சங்க தலைவர் ராகேஷ் தியாகத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Spread the love
Related Posts