வெஸ்டிண்டிஸ் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் தனது ட்விட்டர் பக்கத்தில் ,ஆர்சிபி முன்னாள் உரிமையாளரும், இந்தியாவில் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய தொழிலதிபருமான விஜய் மல்லையாவுடன் இருக்கும் புகை படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கிறிஸ் கெயில் வெஸ்டிண்டிஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.மேலும் 2011 முதல் 2017 வரை ராயல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கிறிஸ் கெய்லை தானே ஏலம் எடுத்ததாகவும் ‘அது ஒரு சிறந்த ஏலம்’ என்றும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மல்லையா, “என்னுடைய நல்ல நண்பர், யுனிவர்ஸ் பாஸ், கிறிஸ்டோபர் ஹென்றி கெய்லை மீண்டும் சந்தித்ததில் பெரிய, மகிழ்ச்சி. அவரை ஏலம் எடுத்த நாளிலிருந்து சிறந்ததொரு நட்பு, ஏலத்தில் வாங்குதலிலேயே ஆகச்சிறந்தது கிறிஸ் கெய்லை ஏலம் எடுத்ததுதான் என்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல்லில் ஆர்சிபியுடன் விளையாடிய போது கெய்ல் சில மறக்கமுடியாத தருணங்களை அனுபவித்தார். 2013 ஐபிஎல் தொடரின் போது, பெங்களூரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 66 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் குவித்தார். 13 பவுண்டரிகள் மற்றும் நம்பமுடியாத 17 சிக்ஸர்களைக் கொண்ட இந்த அபாரமான நாக், இந்திய டி20 லீக்கில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோருக்கான சாதனையாக உள்ளது.
இந்தியாவில் நில மோசடி மற்றும் பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டபட்ட விஜய் மல்லையா, இங்கிலாந்தில் ஜாமீனில் இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2019 ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது இந்த நிலையில் மல்லையா பல்வேறு சட்ட வழிமுறைகளைக் கையாண்டு பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் உத்தரவை எதிர்த்துப் வழக்கை திசைதிருப்பி வருகிறார்