மே மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் ஒரு பவுன் தங்கத்தின் விலை 46,000 ரூபாயைக் தாண்டி விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சத்தை அடைந்தது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.
நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை (gold price) கிராமுக்கு ரூ.7 உயர்ந்து 5,717 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.45,736ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 31 ரூபாய் குறைந்து, ரூ.4,673-க்கு விற்பனை செய்யப்படுகிறது.22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.37 குறைந்து 5,705 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.45,640ஆக விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 82,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 3,300 ரூபாய் குறைந்து, ரூ.78,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.78.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.