தங்கத்தின் விலை மே மாதம் தொடக்கத்தில் ரூ.46 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தொடர்ந்து பங்குச்சந்தையின் ஏற்றம் மற்றும் சரிவு காரணமாக தங்கத்தின் விலையில் மாற்றங்கள் இருந்து வருகிறது.
அந்த வகையில் சென்னையில் நேற்று முன் தினம், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.37 குறைந்து 5,705 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.45,640ஆக விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்து, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து 5,715 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,720 ஆக விற்பனையானது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து 1 கிராம் ரூ.5670க்கும் ஒரு சவரன் ரூ.45,360க்கு விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து 4,645 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ. 37,160 ஆக விற்பனையாகிறது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.