அரசியலமைப்புச் சட்டத்தில் குடிமக்களுக்கு சமஉரிமை உள்ள போது எப்படி இரண்டு வகையான சட்டங்கள் இருக்க முடியும் என்று போபாலில் பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி கேள்வியெழுப்பியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்துக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, போபாலில் உள்ள 5 ரயில் சேவைகளை நேரடியாக வைத்தார்.பின்னர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய மோடி,
‘ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் இரு வேறு சட்டங்களைக் கொண்டிருந்தால் குடும்பம் நன்றாகப் பழக முடியுமா? அப்படியானால் ஒரு நாடு எப்படி இரண்டு சட்டங்களைக் கொண்டு தொடர முடியும்? நமது அரசியலமைப்புச் சட்டமும் குடிமக்களுக்கு சம உரிமையை உறுதி செய்கிறது. உச்ச நீதிமன்றமும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்த பரிந்துரைத்துள்ளது. ஆனால் வாக்கு வங்கியை குறிவைத்து சிலர் முஸ்லிம் சமூகத்தை தவறாக வழிநடத்துகின்றனர்” என்று மோடி கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி முத்தலாக்கை மோடியும் விமர்சித்தார். முத்தலாக் விவகாரத்திலும் முஸ்லிம் சமூகத்தை தவறாக வழிநடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முத்தலாக் ஆதரவாளர்கள் வாக்கு வங்கிக்காக முஸ்லிம் சிறுமிகளுக்கு அநீதி இழைத்து வருவதாகவும், முத்தலாக் பெண்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தையும் அழித்து விடும் என்றும் மோடி கூறினார்.
முஸ்லீம் பெண்களை ஒடுக்க சிலர் முத்தலாக் என்ற கயிற்றை திணிக்க நினைக்கிறார்கள். முத்தலாக்கை ஆதரிக்கிறார்கள். அதனால்தான் முஸ்லிம் சகோதரிகளும் பெண்களும் பாஜகவுடன் நிற்கிறார்கள் என்று மோடி கூறினார்.
மேலும் இஸ்லாமிய மதத்தில் முத்தலாக் இன்றியமையாதது என்றால், எகிப்து, இந்தோனேசியா, கத்தார், ஜோர்டான், சிரியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் ஏன் அது பின்பற்றப்படவில்லை? 90 சதவீத முஸ்லிம்கள் இருக்கும் எகிப்தில் 90 ஆண்டுகளுக்கு முன்பே முத்தலாக் தடை செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
எந்த அரசியல் கட்சிகள் தங்களைத் தவறாக வழிநடத்துகின்றன என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும்,2024 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்றார். ஊழலுக்காக சிறை செல்ல நேரிடும் என்ற அச்சம்தான் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் என்றும் மோடி கூறினார்.