தமிழகம் வரும் பிரதமர் | பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 15 ஆம் தேதி மூன்று நாள் சுற்றுப்பயணமாக மீண்டும் தமிழ்நாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி 2-ம் தேதி திருச்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி,விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து கடந்த 19-ம் தேதி 2-வது முறையாக தமிழகம் பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அப்போது சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்தார்.பின்னர் 20, 21-ம் தேதிகளில் திருச்சி ஸ்ரீரங்கம், ராமேசுவரம், தனுஷ்கோடி கோயில்களுக்குச் சென்று வழிபட்டார்.
அதன் பிறகு பிப்ரவரி 27-ம் தேதி 3-வது முறையாக வருகை புரிந்த பிரதமர் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்திலும், மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இதையும் படிங்க: 7 ஆண்டுகளில் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் – இபிஎஸ் வேதனை
மேலும் மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து 28-ம் தேதி தூத்துக்குடியில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.திருநெல்வேலியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த சூழலில் கடந்த 4-ம் தேதி 4-வது முறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடி, கல்பாக்கத்தில் விரைவு ஈனுலையை தொடங்கி வைத்தார்.பின்னர் சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்ற தாமரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேருரையாற்றினார்.
இப்படி தொடர்ந்து 4 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி மீண்டும் மூன்று நாள் சுற்றுப்பயணமாக மார்ச் 15ம் தமிழகம் வருவதாக தகவல் வெளியகை உள்ளது.
அதன்படி, மார்ச் 15-ம் தேதி சேலத்துக்கு வரும் பிரதமர் மோடி , சேலம் ,நாமக்கல் ,கரூர் ,ஈரோடு உள்ளிட்ட 4 மக்களவை தொகுதிகளுக்கு பரப்புரை மேற்கொள்ளும் வகையில் அந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து, மார்ச் 16-ம் தேதி கோயம்பத்தூர்,கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மக்களவை தொகுதிகளுக்கு பரப்புரை மேற்கொள்கிறார்.
இதற்கடுத்த நாள் கோவையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க மோடி தெலுங்கானா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.