அற்ப காரணங்களுக்காக இன்று மீண்டும் எங்கள் பிரசார வாகனத்தை நிறுத்தியதால், காவல்துறையின் மூலம் திமுக அரசின் அத்துமீறல்கள் எல்லை மீறியுள்ளதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ” அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்புல் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில்,கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் பாஜக மாநில தலைவரும், கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை நேற்றிரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு வரும் வருமானம் எங்கே செல்கிறது – அண்ணாமலை கிடுக்குப்பிடி கேள்வி
அப்போது, அவர் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட முயன்றதாகக் கூறி அவரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி வந்த அண்ணாமலை, காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் . மேலும் , தனது ஆதரவாளர்களுடன் த சாலை மறியலில் ஈடுபட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக அண்ணாமலை உள்ளிட்ட அக்கட்சியினர் 300 பேர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் , 143 மற்றும் 341 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்,
“அற்ப காரணங்களுக்காக இன்று மீண்டும் எங்கள் பிரசார வாகனத்தை நிறுத்தியதால், காவல்துறையின் மூலம் திமுக அரசின் அத்துமீறல்கள் எல்லை மீறியுள்ளன.
இரவு 10 மணிக்குப் பிறகு பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்ற காரணத்தின் கீழ் போலீசார் எங்கள் வாகனத்தை நிறுத்தினர். நாங்கள் பிரசாரம் செய்யவில்லை என்று விளக்கினாலும், எங்கள் வாகனத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன, மேலும் நாங்கள் எங்களுக்காக காத்திருந்த 2000 தொண்டர்களை சந்திக்க விரும்பினோம்.
காவல் துறையினரின் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு அப்பாற்பட்டவை என்று காவல்துறை அதிகாரியிடம் விளக்கிய போதிலும், அவர்கள் எங்களை மாற்று வழியில் செல்லும்படி வற்புறுத்தினர்” என்று தெரிவித்துள்ளார்.