சென்னை மெரினா கடற்கரைக்கு இன்று பொதுமக்கள் செல்ல காவல்துறை தடை விதிக்கபட்டுள்ளதோடு மெரினா கடற்கரையில் உள்ள சர்வீஸ் சாலையில் வாகன போக்குவரத்துக்கும் இன்று அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்தப்படும் என கல்லூரி தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனை அடுத்து கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடை பெற்றதால், தேர்வும் ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை மெரினாவில் ஒன்று கூடுவோம் என்றும் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் இது போன்று வதந்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இதனை அடுத்து மெரினா கடற்கரையில் மயிலாப்பூர் துணை கமிஷனர் தீஷா மிட்டல் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மெரினா கடற்கரையில் உள்ள சர்வீஸ் சாலையில் வாகன போக்குவரத்துக்கு இன்று அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.