சென்னையில் போலீசார் கண்ணில் மண்ணை தூவி வந்த பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் காவல்துறை பிடியிலிருந்து தப்ப முயன்ற பிரபல ரவுடி ரோஹித் ராஜை போலீசார் காலில் சுட்டு பிடித்துள்ளனர் .
கொலை கொள்ளை உள்ளிட்ட பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ரோகித் ராஜை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில் ரோஹித் சேத்துப்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
Also Read : 20 ஆண்டுகள் சிறை தண்டனை – 10 முறை பரோல் பெற்ற பாலியல் குற்றவாளி குர்மீத்.!!
இதையடுத்து ரோஹித் ராஜை போலீசார் சுற்றி வளைத்த போது அவர் தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி ரோஹித்தின் காலை குறிபார்த்து சுட்டுள்ளார்.
இதில் காயமடைந்த ரோஹித் அந்த இடத்திலேயே சுருண்டு விழ அவரை சிகிச்சைக்காக கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .
கடந்த சில நாட்களாக தறிகெட்டு திரியும் ரவுடிகளை அவர்களுக்கு தெரிந்த பாஷைகளில் போலீசார் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வரும் நிலையில் தற்போது ஒரு ரவுடி போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.