நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி சென்னையில் ஒரே நாளில் 122 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் ( Police Transfer) செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான கூட்டணி அமைப்பது, வேட்பாளர்கள் தேர்வு என நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இதனை முன்னிட்டு சொந்த ஊரில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் அல்லது ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் போலீசாரின் பட்டியலை வழங்குமாறு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. அதே போன்று தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளை முடுக்கிவிட்டு உள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகலாம் என்று கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வருகிறார்கள்.
இவர்கள் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
இந்த நிலையில், காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் ( Police Transfer) செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி சென்னையில் மட்டுமே ஒரே நாளில் 122 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள், விபச்சார தடுப்பு காவல் ஆய்வாளர்கள் என பல்துறை பிரிவுகளை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் அடங்குகின்றனர்.
இதையும் படிங்க : chile forest fire – பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு!
தேர்தல் நெருங்கும் நிலையில் காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோல் கடந்த மாதம் 48 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் 122 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டமாக காவல்துறை உதவி ஆய்வாளர்களும் இடமாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.