Major Parties Election Campaign : தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் புதுவையில் உள்ள 1 தொகுதிக்கும் அடுத்த மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
அதே நாளில், காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்றத்திற்கும் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், அனைத்து தொகுதிகளுக்குமான வேட்புமனு தாக்கல் நாளை (20.03.2024) துவங்கும் எனவும் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
எனவே, தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்துமே தங்கள் கூட்டணியை உறுதி செய்து விட்டு,
தங்கள் கட்சியின் சார்பாக போட்டியிடப் போகும் வேட்பாளர்களை நேர்காணல் செய்து அவர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக்கி இருக்கின்றன.
சில சிறிய கட்சிகள் தொகுதி அறிவித்த உடனேயே வேட்பாளரை அறிவித்து விட்டு அந்தந்த தொகுதிகளில் தங்கள் பிரச்சாரத்தை Major Parties Election Campaign எந்தவித ஆர்ப்பட்டமும் இல்லாமல் துவங்கி விட்டன.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டுவரவே இந்த கூட்டணி – அன்புமணி பேட்டி
ஆனால், பெரிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தை துவங்கும் போது தான் உண்மையான தேர்தல் திருவிழா களைகட்டும் எனக் கூறப்படும் நிலையில்,
திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை என்று துவங்கும் என்பதை அறிய ஆர்வமாக இருக்கின்றனர் பொதுமக்களும் வாக்காளர்களும்.
திருச்சியில் துவங்குகிறார் ஸ்டாலின் :
திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில் சிறுகனூருக்கு அருகில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மிகப்பெரிய மாநாட்டை நட்த்தியது திமுக.
அந்த இளைஞர் எழுச்சி மாநாடு நடந்த அதே இடத்தில் இம்மாதம் 22ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார முதல் கூட்டமானது அந்த பொதுக் கூட்டத்தில் இருந்து தான் துவங்கவிருக்கிறது.
அடுத்த நாள் மார்ச் 23ஆம் தேதி தனது சொந்த ஊரான திருவாரூரில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து 39 தொகுதிகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ள முதலமைச்சர், 15 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, இரண்டு, மூன்று தொகுதிகளுக்கு பொதுவானதாக உள்ள 15 இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்குமே ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் வகையில் அவரது பயணத்திட்டத்தை வகுத்துள்ளனர் திமுகவின் தேர்தல் பிரச்சாரக் குழுவினர்.
திமுகவின் கூட்டணிக் கட்சிகள் பலவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்து விட்ட நிலையில், 21 மக்களவை தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களின் பட்டியலை நாளை (20.03.2024) வெளியிடுகிறது திமுக.
அதையொட்டி பகல் 12 மணியளவில் காணோளி காட்சி மூலம் நடக்கும் மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில் உரையாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
அதன் பிறகு வேட்பு மனு தாக்கலை துவக்கும் திமுகவினர், வேட்புமனு தாக்கல் செய்த அன்றே தங்கள் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஸ்டாலின் பிரச்சாரத்தை துவங்கிய மறுதினம் அதே திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை Major Parties Election Campaign துவங்குகிறார் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக எப்போது..?
அதிமுகவின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 24 முதல் மார்ச் 31 வரை முதல் கட்டமாக, தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி, வரும் மார்ச் 24-ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு திருச்சி நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோவில் பகுதியில் தனது பரப்புரையை துவக்கும் எடப்பாடியார்,

மார்ச் 26-ம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல், எம்ஜிஆர் திடலிலும், இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் உள்ள வாகையாடிமுனையிலும் பரப்புரை செய்கிறார்.
அடுத்து..?
மார்ச் 27-ம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் திடலிலும், இரவு 7 மணிக்குத் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள 18-ம் படி கருப்பசாமி கோயில் அருகிலும் பரப்புரை மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி,
மார்ச் 28-ம் தேதி மாலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பாவடி தோப்பு திடலிலும், இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பரப்புரை செய்கிறார்.
அடுத்து, மார்ச் 29-ம் தேதி மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் ஹைவே இன் அருகிலும்,
இரவு 7 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரத்தில் உள்ள ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள அன்னை தெரசா பள்ளி அருகிலும் பரப்புரை செய்கிறார்.
மார்ச் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு புதுச்சேரியில் கடலூர் சாலையில் நீதிமன்றம் எதிரில் உள்ள ரோடியர் மைதானத்திலும், மாலை 6 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திலும் பரப்புரை செய்கிறார்.
மார்ச் 31-ம் தேதி மாலை 3.30 மணிக்கு சிதம்பரம் புறவழிச்சாலையிலும், மாலை 5.30 மணிக்கு மயிலாடுதுறை சின்ன கடைத் தெருவிலும்,
இரவு 7.30 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டம் திருவாரூர் தெற்கு வீதியிலும் சூறாவளி சுறுப்பயணம் செய்து அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக பரப்புரை மேற்கொள்கிறார்.
பாஜக எப்போது..?
நேற்று கோவை, இன்று சேலம் என தமிழக பாஜகவுக்காக தனது பிரச்சாரத்தை துவக்கி அரசியல் களத்தை அனல் பறக்கவைத்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

தமிழக பாஜகவை பொறுத்த வரை சில சிறிய கட்சிகளுடனும், பாமகவுடனும் மட்டும் கூட்டணியை உறுதி செய்து, நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியையும் பாஜகவுடன் இணைத்துக் கொண்டிருக்கிறது.
எனவே, முன் எப்போதையும் விட இம்முறை தேர்தல் பிரச்சாரம் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு சற்றும் சளைக்காமல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுகள் இறுதியான பிறகு பாஜக நேரடியாக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலும், வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் தருணத்தில் பாஜக முக்கிய தலைவர்களின் தேர்தல் பிரச்சார பயணத்திட்டம் வெளியாகும் என கூறப்படுகிறது.