பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மூன்று சுங்கச்சாவடிகளை செயல்படுத்தி வசூல் செய்யத் தொடங்குவார்கள் என்று தங்கத் தமிழ்ச் செல்வன் தேர்தல் பரப்புரையில் Thanga Tamil Selvan campaign கூறியுள்ளார்.
தேனி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தங்கத் தமிழ்ச்செல்வன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கம்பம் சட்டமன்ற தொகுதியில் இன்றைய பிரசாரத்தின்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மூன்று சுங்கச்சாவடிகளையும் செயல்படுத்தி வசூல் செய்யத் தொடங்கி விடுவார்கள் என்று எச்சரித்தார்.
விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ள தேனி மக்கள் மூன்று சுங்கச்சாவடிகளுக்கு சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். இதுவே INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால், செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சுங்கச்சாவடியும் முற்றிலும் அகற்றப்படும் என்றார். எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு ஆதரவளித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.