உங்களுக்கு நடந்தது தவறு என்றால் எனக்கு நடந்தது தவறு தான் ஆனால் நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? என காயத்ரி ரகுராம் குஷ்பூவிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக மேடை பேச்சாளரான சிவாஜி கிருஷ்ண மூர்த்தி ஆளுநர் RN ரவி,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ,குஷ்பூ பற்றிய பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வைரலானது.இந்த நிலையில், குஷ்பூ பற்றிய பேச்சுக்கு அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இதனையடுத்து நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ பெண்களை பற்றி அவதூறாக பேச இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.கருணாநிதி இருந்த போது திமுக இப்படி இல்லை. இவர்கள் பெண்களை அசிங்கபடுத்துவதாக கருத்தில் கொண்டு கருணாநிதியை அவமானப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். பெண்ணைகளை பற்றி தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது. அப்படி வந்தால் திருப்பி அடிப்போம் என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி காவத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில் நன் உதவி கேட்டு கத்திய போது நீங்கள் அனைவரும் உங்கள் பதவிக்காக அமைதியாக இருந்திர்கள் என்று முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் குஷ்பூவை சாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில்,உங்களுக்கு நடந்தது தவறு என்றால் எனக்கு நடந்தது தவறு தான் ஆனால் நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? அண்ணாமலையும் அவருடைய வார்ரூம் என்பதால் அமைதியாக இருந்தீர்களா?நீங்கள் மற்றவரின் பிரச்சனையில் அமைதியாக இருந்ததால் உங்களுக்கு யாரும் குரல் எழுப்பவில்லை.
ஆனாலும் உங்களுக்கும் எனக்கும் நடந்தது எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. மற்றவர்களுக்காக பேசுங்கள். நான் உதவி கேட்டு கத்தியபோது, நீங்கள் அனைவரும் உங்கள் கட்சி பதவிக்காக அமைதியாக இருந்தீர்கள். டெய்சிக்கு வார்த்தைப் பிரயோகம், மிரட்டல் வந்ததும், நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? பல பெண்கள் பாஜக காரியகர்த்தாக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? இப்போது வரை பல வக்கிரங்கள் கட்சியில் அதிகாரத்துடன் சுதந்திரமாக அலைந்து, சில பெரிய பதவிகளில் உள்ளனர். வக்கிரங்கள் அதிகம் உள்ள உங்கள் இடத்தை சுத்தம் செய்யுங்கள். அவர்கள் என்னை எப்படி வாய்மொழியாக பாலியல் துன்புறுத்துகிறார்கள் என்பதை எனது கருத்துகளுக்கு கீழே பாருங்கள்.
இப்போது அண்ணாமலை உங்களுக்காக எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவார், ஆனால் நீங்கள் இல்லாமல் (அவரது பிரவுனிபாயிண்ட்டுகளுக்காக) கடந்த முறை போல் நடத்துவார். அவர் உங்களை எப்படி பாதுகாப்பார்? அவரே கரூர் பெண் மற்றும் இரண்டு சகோதரர்கள் பற்றி கேமரா முன் தவறாக பேசினார்.
உங்களை காப்பாற்றுங்கள் உங்களுக்காக போராடுங்கள் என்பது எனது அறிவுரை. ஒரு பெண்ணாக நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.நீங்கள் ஒரு NCW உறுப்பினர், நீங்கள் ஏன் இன்னும் ட்விட்டரில் உதவிக்காக அழுகிறீர்கள்? போலீஸ் உதவியுடன் அவரை வெளியே இழுத்துச் செல்லுங்கள். NCW இல் இருக்கும் உங்களுக்கு அதிகாரம் இல்லை என்றால் மற்றவர்கள் எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.