சசிகலா புஷ்பா :திருவள்ளூர் தனி தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் பொன்.பாலகணபதி குறித்த சர்ச்சை வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி இருக்க அரண்டு போய் கிடக்கிறார்கள் வாக்கு சேகரிக்கச் செல்லும் பெண்கள்… அப்படிஎன்ன சர்ச்சை வீடியோ வாருங்கள் பார்க்கலாம்…
சமூக வலைதளங்களி வெளியாகி உள்ள இந்த வீடியோவில், முன்னாள் எம்.பியும், பா.ஜ.க நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவிடம் இப்படி பொதுவெளியில் எடக்கு மடக்காக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தபடி நடந்திருப்பவர் வேறு யாருமல்ல… சாட்சாத் திருவள்ளூர் தனி தொகுதி பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன். பாலகணபதி தான்.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் பாஜக சார்பில் அனுசரிக்கப்பட்டது. அப்போது அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் எம்.பியும் பாஜக மாநிலத் துணைத் தலைவருமான சசிகலா புஷ்பாவை, பொதுவெளியில் கூட்ட நெரிசலில் வைத்து பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன். பால கணபதி தவறான வகையில் தொடுவது போல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா புஷ்பாவை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் பொன்.பாலகணபதி நடந்து கொண்டதும், சசிகலா புஷ்பா கையை தட்டிவிடுவதாகவும் வீடியோ காட்சிகள் வெளியானது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் வைரலான நிலையில் , பாலகணபதிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியிடமும் புகார் தெரிவித்திருந்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் தரக் கோரி தேசிய மகளிர் ஆணையம் பால கணபதிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இப்படி சர்ச்சைகளில் சிக்கிய பொன்.பாலகணபதி கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து ஆய்வு செய்ய மதுரை மற்றும் கன்னியாகுமரி பெருங்கோட்டத்துக்கு எம்.எல்.ஏ காந்தி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், சசிகலா புஷாவையும், பொன்.பாலகணபதியையும் சேர்த்து அறிவித்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது பா.ஜ.க தலைமை.

இப்படி சர்ச்சையில் சிக்கிய நபருக்கு தற்போது நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியிலும் போட்டியிட பா.ஜ.க தரப்பில் வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அந்த சில்மிஷ வீடியோ வைரலாகி உள்ளது. நான் அப்படியெல்லாம் செய்யவில்லை… கட்டிங்… வெட்டிங்… ஒட்டிங் செய்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பொன்.பாலகணபதி தன்னிலை விளக்கம் கொடுத்தாலும்… எதுக்கும் பார்த்து வாங்கம்மா… அவர் கூட நெருக்கமாக போகாதீங்க என்று ஒரடி இடைவெளி விட்டுத்தான் வாக்கு சேகரிக்கச் செல்கிறார்களாம் பெண்கள்.