பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பண்டிக் காலங்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்புப் ரயில்கள் இயக்கபடுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கப்படவுள்ளன. இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்…,
ஜனவரி 12 ஆம் தேதி தாம்பரத்திலிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு ஜனவரி 13 ஆம் தேதி காலை 8.15 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும் அதிவிரைவு சிறப்பு ரயில், ஜனவரி 13 ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து இரவு 09.30 மணிக்கு புறப்பட்டு ஜனவரி 14 ஆம் தேதி காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னையிலிருந்து ஜனவரி 13 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு ஜனவரி 14 அதிகாலை 4.20 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும் அதிவிரைவு சிறப்பு ரயில் நாகா்கோவிலில் இருந்து ஜனவரி 14 ஆம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு ஜனவரி 15 அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூா் சென்றடையும்.
இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி மாறும் மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஜனவரி 16 ஆம் தேதி நாகா்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு ஜனவரி 17 ஆம் தேதி அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 17 ஆம் தேதி தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.20 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
16 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு புறப்பட்டு அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக சென்று ஜனவரி 17 ஆம் தேதி காலை 7.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும் சிறப்பு ரயில் ஜனவரி 17 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விருதுநகா், கோவில்பட்டி, சாத்தூா் வழியாக சென்று இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.