பீகார் மாநிலத்தில் பெண்களை கர்ப்பமாக்கினால் லட்சக் கணக்கில் பணம் (Money ) கொட்டோ கொட்டென்று கொட்டுமாம்..
விளம்பரத்தை பார்த்து படையெடுத்த இளசுகளுக்கு இறுதியில் நடந்த சோகத்தை நினைத்து அழுவதா? சிரிப்பதா?
பீகார் மாநிலத்தில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் இதுவரை கேட்டிராத புதுவகை மோசடியாக இருப்பது தான் காமெடியே..
கர்ப்பம் தரிக்க முடியாத இளம் பெண்களை கருத்தரிக்க வைக்கும் ஆண்களுக்கு 13 லட்சம் ரூபாய் வரை வழங்குவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் போலீசாரிடம் கையும் களவுமாக மாட்டியுள்ள சம்பவம் தான் அது..
பெண்களை கர்ப்பமாக்கினால் காசு கிடைக்கும் என்று விளம்பரம் செய்து, கஷ்டப்படாமல் பணத்தை கறந்த கும்பலின் நூதன மோசடி பின்னணி என்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
“pregnant job agency” என்ற போர்டை பார்த்த உடனேயே ஆர்வத்தில் இளசுகளின் பட்டாளம் அங்கு குவிந்தது இந்த மோசடி கும்பலுக்கு பெரும் வசதியாக போய் விட்டது.
உலகில் வேறு எங்குமே, யாருமே யோசித்து பார்க்க முடியாத அளவுக்கு நூதன மோசடியை அரங்கேற்றியுள்ளது இந்த கும்பல்.
“pregnant job agency” என்ற நிறுவனத்தின் பெயரை வைத்தே வலை வீசி வாலிபர்களை பிடித்துள்ளது இந்த கும்பல்.
பீகார் மாநிலம் நவாடா பகுதியில் அமைந்துள்ள இந்த கம்பெனியின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் என்னவென்றால்,
இங்கு தங்கள் பெயர் மற்றும் மொபைல் நம்பரை கொடுத்து பதிவு செய்து கொள்ளும் வாலிபர்கள், குழந்தை பெற முடியாமல் தவிக்கும் பெண்களை தேர்வு செய்து அவர்களை கர்ப்பமாக்கலாமாம்.
இதற்காக முதலில் முன்பணமாக 799 ரூபாய் செலுத்தி இவர்களது உருட்டு கம்பெனியில் முன்பதிவு செய்ய வேண்டுமாம்.
இதையும் படிங்க : https://itamiltv.com/north-korea-attacked-south-korea-cannonballs-attack-risk-of-war-between-the-two-countries-world-news-trending/
பின்னர், குழந்தை இல்லாத பெண்களின் புகைப்படங்களை நிறுவனத்தினர் சம்மந்தப்பட்ட வாலிபர்களுக்கு கொடுப்பார்களாம்.
புகைப்படத்தில் இருக்கும் பெண்களின் அழகை பொறுத்து 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பணத்தை வாங்கி கொண்டு அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்க அனுமதிப்பார்களாம்.
ஒருவேளை அந்த பெண் கர்ப்பம் அடைந்தால் அதற்கு காரணமான அந்த வாலிபருக்கு 13 லட்சம் வரை கொடுப்பார்களாம்.
அந்த பெண் கர்ப்பமாகா விட்டாலும் கூட பரவாயில்லை ஆறுதல் தொகையாக 5 லட்சம் கொடுப்பார்களாம்.
இப்படி தங்களது உருட்டு நிறுவன விளம்பரத்தில் பிட்டு பிட்டாக போட்டு பணம் பறித்துள்ளது இந்த மோசடி கும்பல். இந்த விளம்பரத்தை பார்த்த இளசுகளோ..
கரும்பு தின்ன கூலியா..? என்று நினைத்து ஆர்வத்தோடு பணத்தை செலுத்த படையெடுத்துள்ளனர்.
பணத்தை (Money ) கட்டி விட்டு காத்திருந்தவர்களுக்கு வெகுநாட்கள் ஆன பிறகும் பெண்களின் புகைப்படங்கள் அனுப்பப்படவில்லை.
காத்திருந்து கடுப்பான இளசுகள் நேரடியாக சென்று பார்த்த போதுதான் அது கப்சா கும்பல் என்பது தெரியவந்துள்ளது.
இப்படி சில்லறைத்தனமான ஆசையில் சிக்கி பணத்தை இழந்த வாலிபர்கள் வேறு வழியின்றி போலீசாரிடம் சென்று புகார் கொடுத்துள்ளனர்.
சிறப்பு புலனாய்வுக் குழு போலீசாரின் விசாரணையில் இந்த நூதன மோசடிக்கு மூளையாக செயல்பட்ட முன்னா என்பவரையும், அவரது கூட்டாளிகள் 8 பேரையும் கைது செய்தனர்.