சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவையை, கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் (O-Panneerselvam) கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடித்ததில்..
சென்னைக்கும் திருநெல்வேலிக்கும் சென்னைக்கும் விஜயவாடாவுக்கும் இடையே இரண்டு புதிய ரயில்கள் உட்பட நாடு முழுவதும் ஒன்பது வந்தே பாரத் ரயில்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்துவைத்ததற்காக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் தற்போது 12 மணி நேரமாக இருந்து 8 மணி நேரமாக குறைந்துள்ளது தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இருப்பினும், இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தென் தமிழக மக்கள் விரும்புகின்றனர்.
எனவே, வந்தே பாரத் விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.