2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி திருப்பதிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
119 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் அம்மாநிலத்தில் பாஜக ,காங்கிரஸ், பாரத் ராஷ்டிர கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அந்த வகையில்,தெலங்கானாவில் பாஜகவை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சார பரப்புரை மேற்கொண்டார். முடித்துக் கொண்டு, 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை 26-ம் தேதி திருப்பதிக்கு வர உள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் பயணத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துதிருப்பதி மாவட்ட ஆட்சியர்வெங்கட ரமணா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் நேற்று ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி மற்றும் திருமலைக்கு சென்று ஆய்வு செய்தனர்.