திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பேசிய பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தத் தவறினால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், ரூ.1,509 கோடி மதிப்பீட்டில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் பணிகள் ஏதும் நடைப்பெறவில்லை
இத்திட்டத்தை தற்போது தமிழக அரசு ரத்து செய்துள்ளதாகக் கூறி, அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் விழுப்புரம் காந்தி சிலை முன்பாக, இன்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ச்சுனன் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்ட பொதுமக்களின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனை திமுக அரசு ரத்து செய்துள்ளது. இதனை நாங்கள் வன்மைய கண்டிக்கிறோம்.எனவே, இத்திட்டத்தை மீண்டும் தொடங்கி, பொதுமக்களுடைய குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இதை தவறும் பட்சத்தில் அதிமுக சார்பில் மிக விரைவில் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றார் சி.வி.சண்முகம்.மேலும் இந்த போராட்டத்தில் அதிமுக சார்பில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.