தமிழக அரசு, பொது மக்கள் மீது கூடுதல் சுமையைத் திணிக்கும் வகையில் சொத்துக்கான (Property) வழிகாட்டி மதிப்பீடு அமையக் கூடாது என்றும்,
தமிழக அரசு, சொத்துக்கான (Property) வழிகாட்டி மதிப்பீட்டில் முறையாக மதிப்பிட வேண்டும் என்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,
தமிழக அரசு, சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் முறையாக மதிப்பிட வேண்டும். அதாவது அரசு, சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் சுமார் 33 சதவீதம் உயர்த்தியது நியாயமில்லை.
குறிப்பாக மாநிலத்தில் சொத்துக்களை வழிகாட்டி மதிப்பீடு செய்யும் முறை அரசுக்கு உண்டு. இருப்பினும் பொது மக்களின் சிரமத்தை அறிந்து, ஆலோசனையைக் கேட்டு மதிப்பீடு செய்திருக்க வேண்டும்.
ஆனால் அரசு, பொது மக்களின் கருத்தைக் கேட்காமல் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி நடைமுறைப்படுத்துவதால்,
சிறிய அளவிலான சொத்து (வீடு, மனை, நிலம்) வாங்க முன்வரும், போதுமான பொருளாதாரம் இல்லாமல் தவிக்கும் சாதாரண மக்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.
ஐகோர்ட்டு உத்தரவை அரசு கவனத்தில் கொள்ளாமல் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீட்டில் சுமார் 33 சதவீதம் கூடுதல் கட்டணத்தை வசூல் செய்வது அவமதிக்கும் செயல்.
எனவே தமிழக அரசு, பொது மக்கள் மீது கூடுதல் சுமையைத் திணிக்கும் வகையில் சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு அமையக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு சொத்துக்கான வழிகாட்டி மதிப்பீடு செய்ய முன்வர வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
சொத்து வழிகாட்டி மதிப்பு என்றால் என்ன?
சொத்து வழிகாட்டி மதிப்பு என்பது, மாநில அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு சொத்தை பதிவு செய்யக்கூடிய குறைந்தபட்ச விலை அதாவது, “வழிகாட்டி மதிப்பு” என்று அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1745722047056183429?s=20
தமிழ்நாட்டில் உள்ள சொத்து வழிகாட்டுதல் மதிப்பு ரியல் எஸ்டேட் வணிகத்திற்கான முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
வழிகாட்டி மதிப்பை விட அதிக விலைக்கு சொத்து விற்பனை நடந்தால் அதிக மதிப்பின் அடிப்படையில் பதிவு செய்யப்படும்.
மேலும், வழிகாட்டி மதிப்பிற்குக் கீழே ஒரு சொத்தை நீங்கள் வாங்கினால், இந்த குறைந்த வரம்பின் அடிப்படையில் முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களுக்கு நீங்கள் பொறுப்பாவீர்கள்.