புதுவையில் நடிகர் மாரிமுத்துவிற்கு ரசிகர் ஒருவர் சிலை அமைத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர், நடிகர் ,குணச்சித்திர நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் மாரிமுத்து. மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார்.
முன்னதாக 2011-ல் யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வாலி, உதயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார். 57 வயதான இவர் தற்போது வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் இருந்து சமீபத்தில் சின்னத்திரைக்கு வந்த இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில், ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்தார். இந்த சீரியல் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை கொடுத்தது. மதுரை தமிழில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. சீரிய பகுத்தறிவாதியாக திகழ்ந்து டிவி விவாதங்களிலும் அதனை முழுமையாக வலியுறுத்தி பேசிவந்தார்.
இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக செப்டம்பர் 8 ஆம் தேதி 2023 அன்று உயிழந்தார். இவரது திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய ஏற்படுத்தியது.
இன்றளவிலும் ஆதி குணசேகரன் மறைவை நினைத்து ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.இந்த நிலையில் மனதில் நீங்காத புதுவை ரசிகர் ஒருவர் அவர் நினைவாக சிலை வைத்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.