காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு குடிநீர் ஊற்றி கொடுத்த ராகுல் காந்தி(Rahul Gandhi) வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் (congress) ஆட்சிக்கு வந்தால், அந்த அறிவிப்பில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 2,000 அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்,வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ3,000 நிதி உதவி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், விவசாய கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் போன்ற ஏராளமான வாக்குறுதிகள் அந்த தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில்,கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்து ஆட்சி அமைத்தது. கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாயாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமார் ஆகியோர் பெங்களூருவில் பதவி ஏற்றனர்.

அந்த வகையில் பெண்களுக்கு மாதம் ₹2,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் (கிரகலட்சுமி திட்டம்)தொடக்க விழா இன்று மைசூருவில் நடைபெற்றது. இதில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது மேடையில் அமர்ந்து இருந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராகுல் காந்தி குடிநீர் ஊற்றி கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராகுல் காந்தியின் இந்த செயல் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த வீடியோவை பகிர்ந்து ”தலைவனுக்கான முன்னுதாரணம் நீ என இணையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் சிலாகித்து வருகின்றனர்.