Plastic Surgery : இது சமந்தாவா.. இல்ல ரைசாவா என பார்ப்பவர்கள் குழம்பும் வகையில் உள்ளது பிக்பாஸ் ரைசா வில்சனின் ரீசன்ட் போட்டோஷூட்.
அதுமட்டுமல்லாமல் பிளாஸ்டிக் சர்ஜரி (Plastic Surgery) செய்துள்ளாரா? என்கிற சந்தேகத்தையும் தூண்டும் விதத்தில் அந்த போட்டோ ஷூட் அமைந்துள்ளது.
விளம்பர படங்களில் மாடலாக நடித்தும், பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் ரைசா வில்சன்.
இதையும் படிங்க : BB 7 தாழ்ப்பாள் மேட்டர்.. பிரதீப்க்கு நடந்த சூழ்ச்சி.. உண்மையை உடைத்த விச்சு!
இவர் மிகவும் மார்டர்ன் ஆன பெண்ணாக இருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் தனக்கென ஒரு தனி வட்டம் அமைத்து கொண்டு சிறப்பாக விளையாடி ரசிகர்களை வளர்த்துக் கொண்டார்.
ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த பல விஷயங்களை இவர் கண்டும்… காணாதது போல் விளையாடியது இவருக்கே பாதகமாக மாறி, மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியாமல் வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே, ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதையடுத்து தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கதாநாயகியாக மாறினார்.
‘பியார் பிரேமா காதல்’ என்கிற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் இளம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை அவருக்கு பெற்றுத் தந்தது.
அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர கிளாமர் ரூட்டில் களம் இறங்கினார் ரைசா. அதன் பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
இந்நிலையில், அடுத்தடுத்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள, படங்கள் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதனிடையே தான் தற்போது ரைசா வில்சன் தன்னுடைய அழகை கூட்டுவதற்காக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
ஆனால் பழைய புகைப்படங்களில் இவரது முகம் வேறு மாதிரி இருப்பதும், லேட்டஸ்ட் புகைப்படங்களில் இவரது, பியூட் போன் மிகவும் எடுப்பாக தெரிவதும் தான் இந்த சந்தேகத்திற்க்கு காரணம்.
இதையும் படிங்க : Murugan இந்து கடவுள் என யார் தீர்மானித்தது? – சீமான்!
இந்த மாற்றத்தினால் நடிகை சமந்தா போல் ரைசா வில்சன் தற்போது இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த திடீர் மாற்றத்தோடு கருப்பு நிற கிளாமர் உடையில் அவர் எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதே போன்று ஒரு முறை தன்னுடைய அழகை மெருகேற்றுவதற்காக, ஊசி போட்டு கொண்டதால் அவரது முகம் வீங்கிய நிலையில், அந்த புகைப்படம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.