இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் அருகே மிக்-21 என்ற இந்திய ராணுவ பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியதில் இந்திய விமானப்படை விமானிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள உட்லாய் விமான தளத்தில் இருந்து IAF இன் சிறிய ரக பயிற்சி விமானம் Mig-21 பயிற்சி பயிற்சிக்காக வான்வழியாக கொண்டு செல்லப்பட்டது இந்த நிலையில் விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக பார்மர் அருகே விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானிகள் இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர் .அனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த விபத்துக்கான கரணம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுதாரி கேட்டு தெரிந்துகொண்டார்.
மேலும் இது குறித்து”ராஜஸ்தானில் பார்மர் அருகே IAFன் Mig-21 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானப்படை வீரர்களை இழந்ததால் ஆழ்ந்த வேதனையடைந்தேன்” என்று திரு.ராஜ்நாத் சிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
“நாட்டிற்கு அவர்கள் ஆற்றிய சேவையை என்றும் மறக்க முடியாது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன, ”என்று அவர் கூறினா