தனது மருமகன் தனுஷ் உடன் நடிகை அமலா பால் நெருக்கமாக பழகி வருவதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், அமலா பாலின் வீடு தேடிச்சென்று அவரை எச்சரித்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை அமலா பாலுக்கு தமிழில் மைனா, தெய்வத் திருமகள், வேலையில்லா பட்டதாரி, ராட்சசன் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக ஆன நிலையில், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.
இந்நிலையில், சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடித்து வந்தார். இது அவரது கணவர் ஏ.எல்.விஜய் குடும்பத்துக்கு பிடிக்காததால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது.
இதனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே நடிகை அமலா பால் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்களின் பிரிவுக்கு காரணம் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தபோது தனுஷுக்கும் இவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தை தாண்டிய உறவாக மாறியது தான் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
இவர்களின் இந்த நெருக்கம் ஒருகட்டத்தில் தனுஷின் மாமனாரான ரஜினிகாந்துக்கு தெரியவந்த நிலையில், அவர் அமலா பாலின் வீடு தேடிச் சென்று, தனுஷ் ஒரு குடும்பஸ்தன், அவருக்கும் மனைவி, குழந்தைகள் எல்லாம் இருக்கு, அவர விட்டுடுங்க.. இல்லேனா ரஜினியின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியதிருக்கும் என அவரை மிரட்டியதாகவும் பிரபல சினிமா பத்திரிகையாளரான செய்யாறு பாலு கூறி இருக்கிறார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு அமலாபாலுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் அவர் கேரளாவுக்கு சென்றுவிட்டார் எனவும் கூறி உள்ளார்.