தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய திமுக மாவட்ட கவுன்சிலரை உடனே ( ramadass ) கைது செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த ஆயந்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சாந்தியை அதே ஊரைச் சேர்ந்த திமுக மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் இராஜீவ்காந்தி என்பவர் கடுமையாகத் தாக்கியதுடன், தகாத வார்த்தைகளைக் கூறியும் திட்டியிருக்கிறார்.
பணியில் இருந்த அரசு ஊழியரை திமுக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தாக்கியும், திட்டியும் அவமரியாதை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
Also Read : சித்திரைத் திருவிழா நடந்த பகுதியில் ஒருவர் கொலை..!!!
கிராம நிர்வாக அதிகாரி சாந்தி தாக்கப்பட்டது தொடர்பாக காணை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
கிராம நிர்வாக அதிகாரியைத் தாக்கிய திமுக நிர்வாகி இராஜீவ்காந்தியை உடனடியாக கைது செய்து அவருக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தர தமிழக அரசும், காவல்துறையும் ( ramadass ) நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.