கனிமொழி கருணாநிதி எம்.பி. (kanimozhi) தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழரைப் பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அங்கீகரியுங்கள்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மத்திய மந்திரி அமித்ஷா சென்னை வந்திருந்த நிலையில், சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற தென்சென்னை தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.
அப்போது பேசிய அவர், தமிழகம் இரண்டு முறை தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை தவறிவிட்டுள்ளது. அதற்கு காரணம் திமுக தான். காமராஜர், மூப்பனார் ஆகிய இரண்டு பேர் பிரதமராவதை இழந்ததற்கு காரணம் திமுகதான். இனியாவது வரும் காலங்களில் ஒரு தமிழனை பிரதமராக்க உறுதி எடுப்போம். தமிழகத்தில் ஏழை குடும்பத்தில் இருந்து முதல்வர், பிரதமர் வர வேண்டும் என்று கூறினார்.
அதையடுத்து, அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக கனிமொழி எம்.பி. (kanimozhi) தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழரைப் பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகவும், உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரியுங்கள்!” என்று கூறியுள்ளார்.