Republic Day : பேச்சு போட்டி.. ரெடியாகுங்க!
சுதந்திரம், பெண் உரிமை, சாதி ஒழிப்பு என சமூகத்தின் எல்லா பக்கங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்திய தமிழ்தாய் பெற்றெடுத்த பெருங்கவிஞன் மகாகவி பாரதி பற்றித்தான் நான் இன்று பேச வந்துளேன்..
1882-ம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக எட்டயபுரத்தில் பிறந்தார் பாரதி.
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் மானாமதுரை ஒ.வெ.செ மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர்.
தன் எழுத்துக்களின் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவருடைய கவித்திறனை பாராட்டி ‘பாரதி’ என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் இவருக்கு வழங்கப்பட்டது.
விடுதலைப் போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்தார். இதனால், பாரதி “தேசியக் கவியாகப்” போற்றப்படுகிறார் (Republic Day speech).
தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் அவர்களின் நினைவினைப் போற்றும் விதமாக, எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம்,
சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை பாரதியார் நினைவுச் சின்னங்களாகப் போற்றி வருகிறது.
பாரதியின் படைப்புகள் :
1.குயில் பாட்டு
2.கண்ணன் பாட்டு
3.பாப்பா பாட்டு
4.சுயசரிதை (பாரதியார்)
5.தேசிய கீதங்கள்
6.பாரதி அறுபத்தாறு
7.ஞானப் பாடல்கள்
8.தோத்திரப் பாடல்கள்
9.விடுதலைப் பாடல்கள்
10.விநாயகர் நான்மணிமாலை
11.பாரதியார் பகவத் கீதை (பேருரை)
12.பதஞ்சலியோக சூத்திரம்
13.நவதந்திரக்கதைகள்இந்தியா
14.உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
15.ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
16.சின்னஞ்சிறு கிளியே
17.ஞான ரதம்
18.பகவத் கீதை
19.சந்திரிகையின் கதை
20.பாஞ்சாலி சபதம்
21.புதிய ஆத்திசூடி
22.பொன் வால் நரி
23.ஆறில் ஒரு பங்கு
ஆகியவை பாரதியின் படைப்புகள் ஆகும்.
தினமும் கோவிலுக்குச் செல்லும் வழக்கம் உள்ள பாரதி, அங்குள்ள கோவில் ஒரு நாள் யானைக்குப் பழம் கொடுக்கும் போது மதம் பிடித்த அந்த யானை இவரைப் பிடித்து தூக்கி வீசிதில் பாரதியார் உடல் நலம் குன்றத் தொடங்கியது.
இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1745751438192783575?s=20
இதனால், 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி தனது 39 ஆம் வயதில் இம்மண்ணை விட்டு பாரதியின் உயிர் பிரிந்து சென்றது.
“இறப்பு என்பது உடலுக்குத்தான்.. பாரதி எனும் கவிஞன் பெற்ற கவிதைக்கு இல்லை”.. என்பதை நாமும் தற்போது கண்கூடாக பார்த்துக் கொண்டேதான் உள்ளோம்.
“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!” என்ற பாரதியின் கவிதை வரிகளோடு எனது உரையை முடிக்கிறேன்..
நன்றி… வணக்கம்!