woman involved loan-fraud : அரசு வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் மோசடி ஈடுபட்ட பெண்ணை கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கீதா தேவி என்ற பெண் திருவண்ணாமலை வந்தவாசி பகுதியில் உள்ள வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் மோசடியில் ஈடுபட்டதாகவும்,
மேலும், இறந்தவரின் ஆதார் கார்டினை வைத்து வங்கியில் லோன் பெற்றதாகவும் கூறி, பாதிக்கப்பட்டவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண மோசடி வழக்கு பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்ததின் பேரில் அவர் மீது எஃப் ஐ ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுவரை கீதா தேவியை கைது செய்யாமல் காவல்துறை காலத் தாமதப்படுத்துவதாகவும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : மக்களவைத் தேர்தல் பரபரப்பு : தேர்தல் அதிகாரிகளுக்கு சத்யபிரதா சாகு கடிதம்!
எனவே, மோசடியில் ஈடுபட்ட கீதா தேவியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதையடுத்து கீதா தேவி மீது மத்திய புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் woman involved loan-fraud.