கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருங்குழியைச் சேர்ந்தவர் 46 வயதான மூதாட்டி.இவர் கருங்கல் பேருந்து நிலையத்தில் ஆவின் பால் விற்பனை செய்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று இரவு இவர் வியாபாரம் முடிந்து தனது கடையைப் பூட்டிவிட்டுச் சென்றார்.
இந்த நிலையில் இன்று காலையில் கடை உரிமையாளர் குளோரி கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடையினுள் சென்று பார்த்தபோது அங்கு அவர் வைத்துவிட்டுச் சென்றிருந்த பணம் திருட்டுப் போயிருந்தது.
மேலும் இது குறித்து ஆவின் கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கருங்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்