இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சச்சினின் தரமான சாதனாயை முறியடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் நேற்று விளையாடிய இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அதிரடி காட்டி அவர் வெற்றியை பதிவு செய்தது. அதிலும் குறிப்பாக கம் பேக் கொடுக்க முடியாமல் திணறி வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது காட்டுத்தனமான பேட்டிங்கால் சதம் விளாசி தரமான கம் பேக்கை கொடுத்தார்.
இந்த போட்டியில் மட்டும் 7 சிக்சர்கள் அடித்து அதிரடி காட்டி, இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா புதிய சாதனைகள் படைத்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளி 2ஆம் இடம் பிடித்தார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் சாதனையையும் முறியடித்துள்ளார் . தனது சிறப்பான ஆட்டத்தால் தரமான கம் பேக் கொடுத்துள்ள ரோஹித்திற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.