பழனி முருகன் கோயிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்காக பக்தர்கள் வருகை தந்து முருகனை சரிசித்தும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில் பழனி முருகன் கோவிலில் கோவில் நிர்வாகம் மற்றும் அரசு சார்பில் பொதுமக்களின் வருகைக்காக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பழனி முருகன் கோயிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் கம்பிவட ஊர்தி சேவை (Rope Car) வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 19.08.2023 முதல் ஒரு மாத காலத்திற்கு பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயங்காது.
பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல மின்இழுவை இரயில் (Winch), படிப்பாதை மற்றும் யானைப்பாதை ஆகிய வழிகளை பயன்படுத்தி திருக்கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.