புற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அதிகாரபோர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மனிதனை மெல்ல மெல்ல கொல்லும் நோய்களில் ஒன்றான புற்று நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதில் சில தனியார் மருந்து நிறுவனங்கள், ‘மெலனோமா’ எனப்படும் உயிர் பறிக்கும் தோல் புற்று நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பாதி கட்டத்தை தாண்டியுள்ளன.
அந்த வகையில், புற்று நோய் தடுப்பூசிகள் உருவாக்கும் பணிகளில் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக, களத்தில் இறங்கி இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
காதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் கூறிருப்பதாவது :
புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக என்.ஆர்.என்.ஏ., தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு முதல் இது, நோயாளிகளுக்கு இலவசமாக தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவ உலகில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டாலும், புற்று நோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பது இன்னும் சவாலாகவே உள்ள நிலையில் புற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது பெரும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.