செங்கல்பட்டு அருகே எம்ஜிஆர்(MGR) சிலைக்கு காவித்துண்டு அணிவித்த மர்ம நபர்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியார் திருவள்ளுவர் உள்பட பல சிலைகளில் அவ்வப்போது மர்ம நபர்கள் காவித் துணியை அணிந்து வரும் சம்பவங்கள் நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ரவுண்டானா பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவி உடை அணிந்து சென்று உள்ளதாக தெரிகிறது.இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நேற்று பாஜக அதிமுக கூட்டணியின் முறிவு காரணமாக தான் பாஜகவினர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த திருப்போரூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.